குன்னூர் வெலிங்டன் போர் நினைவிடத்தில் காலாட்படை தினம் அனுசரிப்பு
About this video
குன்னூர் வெலிங்டன் போர் நினைவிடத்தில் காலாட்படை தினம் அனுசரிப்பு is a video by ETVBHARAT, published on October 27, 2026. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from ETVBHARAT below.
Description

நீலகிரி: 79-வது காலாட்படை தினம் குன்னூர் வெலிங்டன் போர் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

குன்னூர் வெலிங்டன் போர் நினைவிடத்தில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27-ம் தேதி காலாட்படை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த வருடம் காலாட்படை தினத்தை முன்னிட்டு, இன்று காலை வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவு தூண் சின்னத்தில், போர்களில் பங்கேற்று உயர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெலிங்டன் ராணுவக் கல்லூரியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எர்ரி மற்றும் ரெஜிமென்டல் மையத்தின் பொறுப்பு கமாண்டன்ட் கர்னல் பிரதீப் குமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, உயர் அதிகாரிகள் பங்கேற்று, போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில், வெலிங்டன் ராணுவ மையம், முப்படைகள் பயிற்சி கல்லூரி, மற்றும் காலாட்படை பிரிவை சேர்ந்த உயர் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், மற்றும் பிற நிலை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை, பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை போன்றவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.